தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக உப்பு விலை உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வருடத்திற்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டில் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் தான் உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் உப்பு உற்பத்தி சீசன் முடிவடைகிறது. தற்போது உப்பு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பு குவியல்களை பிளாஸ்டிக் தார்பாய்கள் கொண்டு உற்பத்தியாளர்கள் பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர். தற்போது ஆறு லட்சம் டன் அளவுக்கு உப்பளங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இந்த உப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை போதுமானதாக இருக்கும்.தற்போது ஒரு டன் உப்பு 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மலை நன்கு பெய்ய தொடங்கியதும் உப்பின் தேவையை பொருத்து உப்பு விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.