ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் உள்ள 800 மெகாவாட் உற்பத்தித் திறனுடன் இரு அனல் மின் நிலையங்களை அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முடிவு செய்தது. இதற்காக சுற்றுச்சூழல் ஒப்புதல் கேட்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதனை பரிசீலித்து ஒப்புதல் வழங்கி இருந்தது. இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் அனைவரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். அனல்மின் நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் அனைத்தும் விவசாய நிலங்கள் எனவும், எந்த விசாரணை நடத்தப்படாமல், இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு அனல் மின் நிலையம் அமைக்க வழங்கிய ஒப்புதலை நிறுத்திவைக்க உத்தரவிட்டு இருந்தது. இதை தொடர்ந்து மனுதாரர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தடையை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.