பிஎஃப் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பிஎஃப் விபரங்களை சரிபார்க்கவும், மாற்றங்களை செய்யவும் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதை தவிர்ப்பதற்காக அரசு தரப்பில் இருந்தும் உமாங் என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலி மூலமாக வீட்டில் இருந்தபடியே பிஎஃப் பேலன்ஸ் பார்ப்பது, பிஎப் கிளைம் தகவல் மாற்றங்கள் போன்ற சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்நிலையில் உமாங் செயலியில் தங்களுடைய ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகும். அப்படி கிடைக்காவிட்டால் தொடர்ந்து சேவையை பெறுவதில் சிக்கல் ஏற்படும். இப்போது ஆதாரை இணைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில் உமாங் செயலியை ஓப்பன் செய்து அதில் New User என்ற வசதியில் செல்ல வேண்டும். உடனே ‘Select Registration Mode’ என்ற ஆப்சன் வரும். அதில் Aadhar number என்பதை கிளிக் செய்ய வேண்டும். புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதில் உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணைப் பதிவிட வேண்டும். பின்னர் டேர்ம்ஸ் & கண்டிசன்களுக்கு ஓகே கொடுத்து submit செய்ய வேண்டும். உங்களுக்கு ஓடிபி அனுப்பப்படும். அதை வைத்து ஆதார் எண்ணை இணைத்துவிடலாம்.