தமிழகத்தில் உள்ள ஆட்டோ சங்கங்கள் ஆட்டோ வாடகைக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். போக்குவரத்து துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆட்டோ சங்க பிரதிநிதிகளுடன் பலமுறை ஆலோசனை நடத்தி திருத்தப்பட்ட கட்டண பரிந்துரையை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று அக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது.
மேலும், ஆட்டோ கட்டணம் மறு நிர்ணயம் தொடர்பாக இணை போக்குவரத்து ஆணையர் தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரையில், 1.5 கி.மீ தொலைவிற்கு ரூ. 40-ம் கூடுதல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கு ரூ.18-ம் உயர்த்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் உயர்வு குறித்து அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.