தொற்று பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் பங்கேற்ற ரத்ததான முகாம் மற்றும் மாணவர் பேரவை உறுப்பினர் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமை தாங்கி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: “சென்னையில் 207 தெருகளில் தலா மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. 181 தெருக்களில் தல ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அங்கு பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் முக கவசம் அணிவதில் எந்தவித தளர்வும் ஏற்படுத்தவில்லை. தற்போது பொதுவெளியில் 40 சதவீதம் பேர் மட்டுமே முகவசம் அணிந்து வருவது தெரிய வருகிறது. இன்று மயிலாப்பூர் சந்திப்பில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ அலுவலர்களை கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை வைத்து 50,000 முக கவசங்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.
இதை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு நடத்துவதற்கு தடை விதிக்கப்படுமா? என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி பொது குழுவை நடத்தினால் எந்தவித தடையும் வழங்கப்படாது என்று கூறியுள்ளார்.