Categories
மாநில செய்திகள்

உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…. தமிழ்நாடு முதலிடம்…. அமைச்சர் பெருமிதம்….!!!!!!!!

மதிய கல்வித்துறை சமீபத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டு இருக்கிறது. அதில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகள் கலந்து கொண்ட உயர்கல்வி மேம்பாடு என்னும் கருத்தரங்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி இந்தியாவிலேயே உயர் தரத்திலும் சதவீதத்திலும் தமிழ்நாடு முதலாவதாக இருக்கிறது. உயர் கல்விக்காக முதல்வர் அதிக நிதியினை ஒதுக்கி இருக்கிறார். கல்வி தரத்தை மேலும் உயர்த்த  முதல்வர்  மாணவிகளுக்கு ஊக்கத்தொகை என பல திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

அனைவருக்கும் உயர்ந்த தரமான கல்வி சென்று சேர வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசின் நோக்கம். தரவரிசையில் இடம்பெற்ற 11 கல்லூரிகளில் ஒன்று மட்டுமே அரசு கல்லூரி என்பதில் சற்று வருத்தம் தான் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் போட்டி போட்டு உயர வேண்டும் என தெரிவித்துள்ளார். அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசும்போது தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற அனைத்து கல்வி நிறுவனங்களும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கின்றது. இந்தியாவிலேயே அதிக மருத்துவர்களை உருவாக்கும் மாநிலம் என்னும் நிலையில் தமிழ்நாட்டில் இருக்கிறது. கலை, அறிவியல், மருத்துவம் என்ற எந்த கல்வியாக இருந்தாலும் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய ஆளுநர் ரவி தரவரிசை பட்டியலில் நாட்டிலேயே முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த கல்லூரிகள் இடம் பெற்றிருப்பது மிகப் பெரிய சாதனை. தமிழ்நாட்டை சேர்ந்த இதர கல்வி நிறுவனங்களும் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் கல்வி தரத்தை இன்னும் உயர்த்திக்கொள்ள வேண்டும். சிறந்த கல்லூரிகள் தங்களது யுத்திகள் முன்னெடுப்புகள் அனுபவங்களை இதர கல்லூரிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். கல்லூரிகள் தங்களை சுய மதிப்பீடு செய்து கொண்டு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |