சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் திறன் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் பழனிசாமி காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உயர் திறன் மேம்பாட்டு மையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சென்னை கிண்டியில் சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம், சென்னை நோலம்பூர், பெரம்பலூரில் வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள் மற்றும் மதுரையில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார்.