இந்தியா 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்து பொருட்களை வழங்கி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
நாம் மருந்து மூலப்பொருட்களுக்கு 90% சீனாவை நம்பி உள்ளதாகவும் நம் நாட்டின் ஆராய்ச்சியையும், ஆராய்ச்சியாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும் எனவும் மத்திய மற்றும் மாநில அரசுகளை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் மக்களுக்கு தரம் குறைந்த மருந்து பொருட்கள் கிடைப்பதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி கொரோனா காலத்தில் உலக நாடுகளுக்கு மருந்துகள் வழங்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கின்றது என்று கூறியுள்ளார். மேலும் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருந்துகள் வழங்கியுள்ளதாக பெருமிதத்துடன் கூறியுள்ளார். நீதிமன்றம் இந்தியா மருந்து மூலப் பொருட்கள் உற்பத்தியில் முன்னேற்றம் காண வேண்டும் என்று கூறியுள்ள நிலையில் பிரதமர் மோடியின் இந்த பதில் உயர்நீதிமன்றத்துக்கு பதிலடியாக அமைந்துள்ளது.