ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பிப்ரவரி 29 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் அறிவித்தனர். தங்களை நீக்கி அறிவித்த பொதுக்குழு தீர்மானம் செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கி எதை செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என சசிகலா கூறியுள்ளார்.