தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்திற்கு நாளை முதல் 17 முதல் 27 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் புகழ் பெற்ற தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்திற்கு நாளை 17 முதல் 27-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர வழக்குகளுக்கு வரும் 20-ஆம் தேதி மனு தாக்கல் செய்தால் 22-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என பதிவாளர் சி. குமரப்பன் தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பார்த்திபன், வேல்முருகன், ஜெயச்சந்திரன், சுவாமிநாதன், ஆசாஸ் சரவணன் ஆகியோர் விசாரிப்பார்கள் என்று பதிவாளர் தெரிவித்துள்ளார். அதேபோல் மதுரை கிளைகள் நீதிபதிகள் கல்யாணசுந்தரம் அப்துல் குத்தூஸ் ஆகியோர் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.