தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அர்ச்சகர்கள் நியமன விதிகளை எதிர்த்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.மேலும் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.
இந்நிலையில் தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தீர்ப்பு வந்த அடுத்த பத்து நிமிடங்களில் 197 மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளை காணொளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை, திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர்,பழனி மற்றும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.