Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உயர்நீதிமன்ற உத்தரவு…. “நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள்”…. பொதுமக்கள் எதிர்ப்பு…!!!!!

நீர்நிலையை ஆக்கிரமித்து இருக்கும் வீடுகளை அகற்றுவதாக அதிகாரிகள் கூறியதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

தற்பொழுது தமிழகத்தில் நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் குமரி மாவட்டத்தில் இருக்கும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன்படி நாகர்கோவில் புத்தேரி குளத்தின் கரையில் மேல கலுங்கடி பகுதியில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றது. இந்த வீடுகள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் கட்டியிருப்பதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு மூன்று நோட்டீஸ் அனுப்பினார்கள்.

மேலும் வீடுகளை காலி செய்யும்படி கூறினார்கள். இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்பொழுது அவர்கள் கூறியதாவது, சென்ற அறுபது வருடங்களுக்கும் மேலாக இங்கு குடியிருந்து வருகின்றோம். தற்பொழுது திடீரென காலி செய்ய சொன்னாள் நாங்கள் எங்கு செல்வோம். மாற்று இடம் தராமல் வீடுகளை அகற்றக் கூடாது என கூறினார்கள். இதன் பின்னர் போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். பின் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

Categories

Tech |