தற்போது இந்தியன் ரயில்வே அதிர்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் டிக்கெட் விலையை இந்தியன் ரயில்வேதுறை உயர்த்தி இருக்கிறது. இந்த பண்டிகைக்காலத்தில் நீங்கள் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், எந்த டிக்கெட் விலை அதிகரித்துள்ளது என்பதை இங்கே தெரிந்துகொள்வோம். இந்தியன் ரயில்வே துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளின் விலையானது உயர்த்தப்பட்டு இருக்கிறது. முன்பாக இதன் விலையானது 10 ரூபாயாக இருந்த நிலையில், இப்போது 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
உங்களது குடும்பத்தில் யாரேனும் இம்முறை ரயிலில் ஏற்றிவிட வந்தால், அவர்கள் பிளாட்பார்ம் டிக்கெட்டுக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். தீபாவளி பண்டிகையின்போது பிளாட்பார்மில் அதிக கூட்டத்தை குறைக்கும் அடிப்படையில் பிளாட்பார் டிக்கெட்டின் விலையாது 10 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருப்பதாக இந்தியன் ரயில்வே தெரிவித்து இருக்கிறது. இந்தியன் ரயில்வே இந்த விலையை அக்டோபர் 30 ஆம் தேதி வரை அதிகரித்துள்ளது.
30ம் தேதிக்கு பின் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் விலை மீண்டும் 10 ரூபாய்க்கு கிடைக்கும். டெல்லி, ஆனந்த் விஹார் ரயில் முனையம் மற்றும் காசியாபாத், சாஹிபாபாத் சந்திப்பு ஆகிய நிலையங்களில் அதிகபட்சம் மக்கள் காணப்படுவார்கள். ஏனென்றால் இங்கிருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் தீபாவளி பண்டிகைக்கு உத்திரபிரதேசம், பீகார் மற்றும் வடகி ழக்கு மாநிலங்களுக்கு பயணிக்கின்றனர்.
இந்நிலையில் பண்டிகைக் காலத்தைக் கருதி இந்தியன் ரயில்வேதுறை இந்த மிகப் பெரிய முடிவை எடுத்திருக்கிறது. இதனுடன் ஆர்பிஎப் வாயிலாக சிறப்பு பிரச்சாரமும் துவங்கப்பட்டுள்ளது. ஆர்பிஎப் வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது தவிர்த்து தீபாவளிக்கு இந்தியன் ரயில்வேயால் பல சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் எளிதாக டிக்கெட் பெற இயலும்.