புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் மேற்கு பேட்டை தெருவில் அல்லா பிச்சை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பீவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹாலித் முகமது என்ற மகன் இருந்துள்ளார். இவர் எட்டாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு டாஸ்மார்க் பாரில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை அப்பகுதியில் இருக்கும் முட்செடிகள் அடர்ந்த பகுதியில் உள்ள உயர்மின் கோபுரத்தில் முகமது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்
. சற்று தூரத்தில் மது பாட்டில், தண்ணீர் பாட்டில், சிகரெட், மிச்சர் ஆகியவை இருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முகமதுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.