Categories
தேசிய செய்திகள்

உயர் அதிகாரி போல் நடித்து 200 கோடி மோசடி… நடிகை ஜாக்குலினுக்கு டெல்லி கோர்ட்டு அதிரடி உத்தரவு…!!!!!

பிரபல நடிகைக்கு வழங்கப்பட்ட ஜாமின் மேலும்  நீடிக்கப்பட்டுள்ளது.

சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் நடித்து 200 கோடி ரூபாய் மிரட்டி பறித்த  வழக்கில் சந்திரசேகர்   என்பவர்  கைது செய்யப்பட்டார். மேலும் போலீசார் அவருடன் தொடர்புடைய நடிகை லீனா மரியா பாலையும் கைது செய்தனர். இந்நிலையில் இது தொடர்பாக அமலாக்கத்துறை வக்கீல் செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி ஆஜராக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு  உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் ஜாமீன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் ஜாக்குலினுக்கு  ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது வக்கீல் வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபாய் செலுத்த உத்தரவிட்டு  அவருக்கு நவம்பர் 10-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |