வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தமூப்பர்கொட்டாய் பகுதியில் சந்துரு(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணினி அறிவியல் டிப்ளமோ படித்து முடித்த சந்துரு உயர் படிப்பு படிப்பதற்காக தனது பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு சந்துருவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்து வாலிபர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சந்துரு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.