தமிழ் சினிமாவில் 3 படம் மூலம் அறிமுகமானவர் அனிருத். இவரின் கொலைவெறி பாடல் இந்தியா முழுவதும் பிரபலமானது. முதல் படத்தில் பிரபலமான தமிழ் இசையமைப்பாளராக பட்டியலில் இணைந்தார். மாஸ்டர் பட பாடல் இந்தியா எங்கும் பிரபலமானது. சினிமா, கிரிக்கெட், நட்சத்திரங்கள் மாஸ்டர் பாடலுக்கு நடனமாடி அதன் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்கள். இந்நிலையில் தனது 32 வது பிறந்த நாளை அனிருத் கொண்டாடி வருகிறார். இவர் வருடத்திற்கு அதிகபட்சமாக 3,4 படங்களுக்கு மட்டுமே அனிருத் இசையமைத்து வருகிறார். படங்களில் எண்ணிக்கை உயர்த்த அவர் எப்போதும் ஆசைப்படுவதில்லை. இவர் வருடத்திற்கு ஒரு படம் என்றாலும் அந்தப் படத்தில் இசை பெருமளவு கை கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார். அதனைத் தொடர்ந்து 2022 அனிருத் எங்கேயோ கொண்டு சென்று விட்டது.
பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் என இசையமைத்த அத்தனை படங்களும் வெற்றி அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். 90’ரஹ்மானியிடம் தென்பட்ட வேகம், புதிய முயற்சிகள், தொடர் வெற்றிகள் அனிருத்தின் வளர்ச்சியை காணும்போது ஞாபகத்துக்கு வருகிறது. கையில் பிடிக்க முடியாத உயரம் சென்றார் ரகுமான். தற்போது அதே வேகத்தில் அனிருத் முன்னேறி கொண்டே இருக்கிறார். அது மட்டுமில்லாமல் அனிருத் பாடல்களின் காணொளிகளில் அதிகமாக நடிக்கவும் செய்கிறார். அதனால் அவருடைய முகம் அவருடைய இசை போல ரசிகர்களிடம் நன்கு கவனம் பெற்றுள்ளது. திரையுலகம் எதிர்பார்க்கிற துடிப்பு அனிருத்திடம் உள்ளது. தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இசையமைப்பாளர் என்று அனிருதை தாராளமாக மதிப்பிடலாம். அனிருத் இசை அமைக்கும் ஜெயிலர், ஜாவான், இந்தியன் 2, அஜித் படம் என அத்தனை படங்களும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. உயர பறக்கும் இசை குருவி மேலும் பல அமர்க்களமான பாடல்களை தர வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பம் ஆகும்.