உயிரிழந்த மனைவியை அடக்கம் செய்யும் பொழுது குழிக்குள் நிர்வாணமாக இறங்கி கணவர் இறுதிச் சடங்கு செய்த நிகழ்வு அந்த பகுதியில் ஊர் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் சின்ன பசிலிகுட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பூர்ணிமா. இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்தவரோடு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் பூர்ணிமா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கிடந்துள்ளார்.
இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். ஆனால் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பூர்ணிமாவை இறுதிச் சடங்கு செய்யும் பொழுது திடீரென்று அவருடைய கணவர் நிர்வாணமாக குழிக்குள் இறங்கி பூஜை செய்துள்ளார். இதை பார்த்த அங்கிருந்த மக்கள் அச்சத்தில் அலறி அடித்து ஓடியுள்ளனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் பூர்ணிமாவின் கணவர் சிவன் பக்தர் என்றும் அதன் காரணமாகவே இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.