நோய்வாய் பட்டு உயிரிழந்த காலை மாட்டிற்கு அதனை வளர்த்த விவசாயி இறுதிச்சடங்கு நடத்தி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயியான சின்னப்பா கரியன் எனும் பெயர் கொண்ட காளை மாட்டை வளர்த்து வந்தார். ஒவ்வொரு வருடமும் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் எருது விடும் விழாவில் பங்கேற்கும் இந்த காளை மாடு பல பரிசுகளை வாங்கிக் குவித்துள்ளது. இந்நிலையில் நோய்வாய்ப்பட்ட கரியன் பரிதாபமாக உயிரிழந்தது. தனது வீட்டில் சக உயிராக காளை மாட்டை பார்த்து வந்த விவசாயி அதனை அடக்கம் செய்ய முடிவு செய்தார்.
இதனால் மனிதர்கள் இறந்தால் செய்யும் சடங்கு போல் காளை மாட்டுக்கும் மேளதாளம், கண்ணீர் அஞ்சலி என தனது கிராமத்தில் வைத்து இறுதிச் சடங்கை நடத்தி உள்ளார். அதோடு போட்டிகளில் பங்கேற்று காளைமாடு பெற்ற பரிசுகளையும் அவர் வைத்திருந்தார். கரியன் இறந்ததை அறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு காளை மாட்டின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.