கேரள மாநிலம் கொல்லம் அருகில் உள்ள புனலூர் பகுதியில் தினேஷ் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி அஞ்சு. இந்த தம்பதி தங்களது மூன்று மாத குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கொட்டாரக்கரை பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்த கார் தினேஷ் கிருஷ்ணனின் காரில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தினேஷ் கிருஷ்ணனும் மனைவி அஞ்சுவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவரின் 3 மாத குழந்தை காயத்துடன் உயிர் தப்பியது. மற்றொரு காரில் இருந்தவர்கள் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்த குழந்தை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. மூன்று மாத கைக்குழந்தையை தவிக்க விட்டுவிட்டு விபத்தில் தாய் தந்தை இருவரும் பலியானது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.