Categories
தேசிய செய்திகள்

உயிரிழந்த பெண்ணின் உடல்… அடக்கம் செய்ய பணம் இல்லை… மகன்கள் என்ன செஞ்சாங்க தெரியுமா? …!!!

பெலகாவி அருகே தகனம் செய்வதற்கு பணம் இல்லாத காரணத்தால் மூன்று நாட்களாக ஒரு பெண்ணின் உடல் மருத்துவமனையில் இருந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெலகாவி அருகே கணேசபுரா என்ற கிராமத்தில் 50 வயதுடைய பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு கடந்த 14ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரின் இரண்டு மகன்களும் பாரதியை சிகிச்சைக்காக பெலகாவி பீம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 16ஆம் தேதி இரவு உயிரிழந்தார். அவர் இறந்து விட்டதாக அவரின் இரண்டு மகன்களிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள், கொரோனா ஊரடங்கு காரணமாக தங்களுக்கு வேலை இல்லை என்றும், தாயின் உடலை அடக்கம் செய்வதற்கு பணம் இல்லை என்றும், பணத்தை ஏற்பாடு செய்யும் வரையில் தாயின் உடலை மருத்துவமனையில் வைத்துக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.

அதனால் பாரதியின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த தேவைப்படுபவர்களுக்கு உதவி என்ற அமைப்பை சேர்ந்த சிலர், பாரதியின் மகன்களிடம் தாயின் உடலை அடக்கம் செய்வதற்கு பணம் தருவதாகக் கூறியுள்ளனர். அதன் பிறகு பாரதியின் உடல் நேற்று முன்தினம் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள மயானம் ஒன்றில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அடக்கம் செய்ய பணம் இல்லாமல் மூன்று நாட்களாக பெண்ணின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |