பீகார் மாநிலத்தில் சமஸ்திபுரையில் மகேஷ் தாக்கூர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் உயிரிழந்த தனது மகனின் உடலை பெறுவதற்காக ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க இல்லாததால் பிச்சை எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் கூறியது, சில நாட்களுக்கு முன்பு எனது மகன் காணாமல் போய்விட்டான். அப்போது சர்தார் ஆஸ்பத்திரியில் தனது மகனின் உடல் உள்ளதாகவும் அதனை பெற்று செல்லுமாறு போன் வந்தது. இதனையடுத்து அங்கு சென்று பார்த்தபோது உடலை பெற ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மேலும் நாங்கள் ஏழைகள் எப்படி இவ்வளவு பணத்தை கொடுக்க முடியும் என்று அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து நிர்வாகத்தினர் கூறியது, இந்த விஷயத்தில் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கு காரணமானவர்களை தப்பிக்க விடமாட்டோம் என்று அவர் தெரிவித்தார். மேலும் ஆஸ்பத்திரி ஊழியர் யாரேனும் தவறு செய்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும நிர்வாகியை வினய்குமார் தெரிவித்துள்ளார்.