Categories
உலக செய்திகள்

உயிரிழந்த 12 வயது சிறுமி… குளிப்பாட்டும் போது அதிர்ச்சியில் ஆழ்ந்த குடும்பம்…!!!

இந்தோனேசியாவில் உயிரிழந்த 12 வயது சிறுமி இறுதி சடங்கின் போது உயிர் பிழைத்து பின்னர் ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவை சேர்ந்த சிட்டி மஸ்ஃபுபா வர்தா என்ற 12 வயது சிறுமி உடல்நிலை சரியில்லாததால் கடந்த 18ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று மாலை 6 மணியளவில் சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னர் சிறுமியின் சடலத்திற்கு இறுதி சடங்கு செய்வதற்காக குடும்பத்தார் சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர். வீட்டில் சடங்கு செய்து குளிப்பாட்டி கொண்டிருக்கும் போது, திடீரென சிறுமி கண்விழித்ததோடு மட்டுமல்லாமல் இதயமும் துடிக்க ஆரம்பித்தது.

அதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அதன் பின்னர் உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு தீவிரமாக சிகிச்சை அளித்த நிலையில், ஒரு மணி நேரத்தில் சிறுமி மீண்டும் உயிரிழந்துவிட்டார். இது பற்றி மருத்துவர்கள் கூறும் போது, ” இது ஹைபர்கேமியாவால் நிகழ்ந்துள்ளது. அதாவது ரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருக்கும் போது இப்படி ஒரு சூழல் நிகழ்கின்றது” என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |