Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உயிருக்கு ஆபத்து இருக்கிறது” பசு மாடுகளுடன் மனு கொடுக்க வந்த பெண்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் பசு மாடுகளுடன் வந்து மனு கொடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது புகையிலைப்பட்டியில் வசிக்கும் ஆரோக்கிய ஜென்சி என்பவர் தனது இரண்டு பசு மாடுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். சிலர் அந்த நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்.

இதுகுறித்து தட்டி கேட்ட என்னையும், எனது பெற்றோரையும் அவர்கள் தாக்கி மிரட்டல் விடுகின்றனர். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எங்களது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரோக்கிய ஜென்சி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |