இன்று நாடு முழுவதும் சகோதரப் பாசத்தை உணர்த்தும் ரட்சா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பதாயூன் பகுதியில் சகோதரரின் உயிரை காப்பாற்ற அவரின் உடன்பிறந்த சகோதரிகள் இருவர் ஆளுக்கொரு கல்லீரல் வழங்கி உறுப்பு தானம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
சகோதரன் கிருஷ்ணாவின் (14) இரண்டு கல்லீரல்களும் பழுதாகி அவர் உயிருக்கு போராடி வந்த நிலையில் அவரின் சகோதரிகள் பிரேமா, நேகா ஆகியோர் தலா ஒரு கல்லீரலை தானம் செய்து ரக்ஷா பந்தன் தினத்தில் அவருக்கு விலைமதிப்பற்ற பரிசை கொடுத்துள்ளனர்.