Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய தேசிய பறவை… உயிருடன் மீட்ட தீயணைப்பு படை… வனத்துறையினரிடம் ஒப்படைப்பு..!!

பெரம்பலூரில் கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் செல்லும் வழியில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. அது அப்பகுதியில் வசிக்கும் குணசேகரன் என்ற விவசாயிக்கு சொந்தமான கிணறு. அந்த கிணற்று தண்ணீரில் ஆண் மயில் ஒன்று நேற்று காலை தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. அதனை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்துள்ளனர்.

இதையடுத்து பெரம்பலூரில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த மயிலை உயிருடன் மீட்டனர். அதன்பின் அந்த மயில் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |