Categories
தேசிய செய்திகள்

உயிருக்கு போராடிய நபர்…. துரிதமாக செயல்பட்ட தெருநாய்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

தெருநாய் ஒன்று விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்ற அருகிலுள்ளவர்களை உதவிக்கு அளித்துள்ளது சோகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் வசித்து வருபவர் ஜான்(48). இவர் வேலை முடித்துவிட்டு ஆலப்புழாவில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் கிடந்த கம்பி மீது பைக்கை ஏற்றியதால் நிலை தடுமாறி அருகில் இருந்த குளத்தில் விழுந்துள்ளார். இந்நிலையில் குளத்தினுள் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை கவனித்த தெருநாய் ஒன்று துரிதமாக செயல்பட்டு பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளது.

தொடர்ச்சியாக இந்த நாய் குரைத்துக் கொண்டே இருந்ததால் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் என்னவென்று குளத்தில் டார்ச் அடித்து பார்த்தபோதுதான் ஜான் குளத்தில் கிடந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் சிக்கிய ஜானை காப்பாற்றியுள்ளனர். இவர் தலைகுப்புற விழுந்ததால் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |