செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தேவனூர் பஜனை கோவில் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரெட்டிபாளையம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரங்கநாதன் அவென்யூ பகுதியில் மணிகண்டன் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது பசு மாடு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தது. இதனால் மாடு மீது மின்சாரம் பாய்ந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் மாட்டை காப்பாற்ற முயன்ற போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று மணிகண்டனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.