உயிருக்கு போராடிய பசுமாடை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் பசுபதி நகர் முதல் தெருவில் விவசாயியான குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடு அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுடைய விவசாய கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை பத்திரமாக மீட்டனர்.