சேலம் மாவட்டத்தில் உள்ள கணவாய் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.என் புதூர் பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது கிணற்றில் மான் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை ராஜசேகர் பார்த்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த புள்ளி மானை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு மான் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் மானுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வனப்பகுதியில் விட்டனர்.