சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ஆவணி மூல வீதி பகுதியில் தட்சிணாமூர்த்தி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் நேற்று பழனி காரமடை பகுதியில் சாலையோர திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முதியவர் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.