தண்ணீரில் தத்தளித்த முதியவரை வாலிபர்கள் மீட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் பெரிய மேம்பாலம் அமைந்துள்ளது. இதற்கு கீழே கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்நிலையில் கால்வாயில் இருக்கும் பள்ளத்தில் 62 வயது முதியவர் ஏற முடியாமல் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த மாரிகண்ணு, தென்னரசு ஆகிய வாலிபர்கள் முதியவரை காப்பாற்றியுள்ளனர். பின்னர் அவர் வேலூரைச் சேர்ந்த நாராயணன் என்பதும், ராமேஸ்வரத்திற்கு செல்வதும் தெரியவந்தது. இதனை அடுத்து அந்த முதியவரை போலீசார் கார் மூலம் ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.