Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய மூதாட்டி…. தீயணைப்பு வீரர்களின் 2 மணி நேர முயற்சி…. பாராட்டிய பொதுமக்கள்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொக்குபட்டி பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாப்பா அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றுக்குள் கால் தவறி விழுந்துவிட்டார். சுமார் 100 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் இருந்த ஒரு கல்லை பிடித்துக்கொண்டு மூதாட்டி என்னை காப்பாற்றுங்கள் என சத்தம்போட்டு போட்டுள்ளார்.

இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மூதாட்டியை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டிய கூடை மூலம் உயிருடன் மீட்டனர்.

Categories

Tech |