வாத்தை காப்பாற்ற முயன்ற பள்ளி ஆசிரியர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பெஞ்சமின் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் புலியடி தம்மம் என்னும் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது அங்கு கிணற்றில் விழுந்த வாத்தை காப்பாற்ற முயன்று உள்ளார்.
பின்பு வெற்றிகரமாக வாத்தை காப்பாற்றிய பெஞ்சமின் கிணற்றிலிருந்து வெளியே வர முயன்றபோது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தார்.
பின்பு அங்கு வந்த போலீசார் பெஞ்சமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.