தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் கட்டிட மேஸ்திரியான குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருந்துள்ளனர்? இதில் மூன்றாவது குழந்தை சஞ்சனா(1 1/2). இந்நிலையில் சஞ்சனா விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தரைமட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்துவிட்டாள்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சஞ்சனாவை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சஞ்சனாவை பரிசோதித்து பார்த்தவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.