Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடி கொண்டிருந்த மயில்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டி ராஜீவ் காலணியில் ராமகிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் மயில் ஒன்று விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த ராமகிருஷ்ணா தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மயிலை பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.

Categories

Tech |