உறவினரை காண சென்ற நபருக்கு விமான சேவை தடையால் சொந்த நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கனடாவிலுள்ள ஒன்றாரியோவில் உள்ள ooakville என்ற நகரைச் சேர்ந்த jim (66). இவரது உறவினர் ஒருவர் மரணப்படுக்கையில் இருப்பதால் அவரைக் காண பிரிட்டனுக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் மீண்டும் கனடா திரும்புவதற்காக விமான நிலையம் வந்துள்ளார். அப்போதுதான் பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரசால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்ற விபரம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் jim ன் மகளான Saara O carrol தன் தந்தையை எவ்வாறு கனடாவிற்கு அழைத்து வருவது என்று தவித்து வருகிறார்.
மேலும் jim ற்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் அவரது மகள் வருத்தத்தில் உள்ளார். இந்நிலையில் பிரிட்டனில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த jimற்கு நேற்றுடன் அந்த அறையில் தங்குவதற்கான கால அவகாசம் முடிந்துள்ளதாம். மேலும் கனடா அரசு தற்போதைக்கு கனடா குடிமக்களை அவர்களின் நாட்டிற்கு திரும்ப அழைக்க எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. இதனால் தந்தை ஒரு நாட்டிலும் மகள் ஒரு நாட்டிலும் இருந்துகொண்டு மன வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.