Categories
சினிமா

“உயிருக்கு போராடும் நிலை”…. நடிகை குஷ்பு வெளியிட்ட பதிவால் பதறிய ரசிகர்கள்…. யாருக்கு என்ன ஆச்சு….????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை குஷ்பூ. 80களில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து அசத்தியவர். சின்னத்திரையிலும் கலக்கியுள்ளார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் அரசியலில் குதித்தார். மறுபக்கம் தனது கணவர் சுந்தர் சி மற்றும் 2 பெண் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் வாரிசு திரைப்படத்தில் கூட நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் குஷ்பூ தற்போது வெளியிட்டுள்ள ஒரு பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஷ்பு வெளியிட்ட பதிவில், தனிப்பட்ட நெருக்கடி காரணமாக சிறிது காலம் ஓய்வில் இருந்தேன், எனது சகோதரர் உயிருக்கு போராடி வருகிறார். கடந்த நான்கு நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சற்று நலமாக உள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்ளுங்கள் என அவர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |