கேரள மாநிலத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியவர் இறந்த பின்னரும் உடல் உறுப்பு தானம் செய்து மக்களுக்கு வாழ்வு கொடுத்திருக்கின்றார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த அனுஜித் என்ற 27 வயதுடைய இளைஞர் கொரோனா ஊரடங்கும் வேலை இல்லாமல் இருந்த நிலையில் சென்ற வாரம் வேலை தேடி செல்லும்போது விபத்தில் உயிரிழந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மூளை செயலிழந்து விட்டது என மருத்துவர்கள் கூறினர். இதனைத்தொடர்ந்து அனுஜூத்தின் பெற்றோர் தன் மகன் ஆசைப்பட்டபடி அவனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தார்கள். பின்னர் அவரின் இரு விழிப்படலங்கள், இருதயம், இரு சிறுநீரகங்கள், சிறுகுடல் கைகள் ஆகிய அனைத்தும் 8 நபர்களுக்கு தானம் செய்யப்பட்டது. அதே சமயத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த பெரிய ரயில் விபத்து ஒன்றை அனுஜித் தடுத்து நிறுத்தியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் அவர் படித்து கொண்டிருந்த போது கொட்டக்கரை அருகே இருக்கின்ற ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனை அறிந்த அனுஜித் உடனடியாக உயிரையும் பெரிதாக கருதாமல் தான் கையில் வைத்திருந்த சிவப்பு பையை எடுத்து கொண்டு தண்டவாளத்தில் ஓடியுள்ளார். அதனைத் தொடர்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. அத்தகைய சம்பவத்தினை நினைவில் வைத்திருந்த கேரள அமைச்சர், அன்று பல உயிர்களை காப்பாற்றிய அவர் இன்று எட்டு நபர்களின் மூலமாக நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என பெருமிதம் கூறியிருக்கின்றார்.