பிரான்சில் உயிருடன் குதிரைகளை சிதைத்து, அவைகளின் உடல் பாகங்களை எடுத்துக்கொண்ட மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடிக் கொண்டிருக்கின்றனர்.
பிரான்சின் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து நாட்டில் குதிரைகள் மற்றும் கழுதைகள் மீது குறைந்தது 15 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன் லியோனுக்கு அருகிலுள்ள கிராமத்தில் மர்ம கும்பல் தாக்குதல் நடந்தது. திடீரென ஏற்பட்ட இந்த தாக்குதலில் அதிகாரிகள் எந்த நபர்களையும் சந்தேகம் கொள்ளவில்லை. ஆனால் இந்த தாக்குதல்கள் விவகாரமான சடங்கு அல்லது ஒன்லைன் சவாலில் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஜீரா பகுதியில் இயற்கைக் காரணங்களால் இருந்த ஒரு ஒரு பெண் குதிரையின் மூக்கு, காது மற்றும் ஒரு கண் அகற்றப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. அதே பகுதியில் இதற்கு முன்னதாக ஒரு குதிரையின் கண்கள் இரண்டும் பிடுங்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. அந்த குதிரை சில நாட்களுக்குப் பின்னர் இறந்து விட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல்கள் தெரிய வரும் பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.