குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் வார்டில் திடீரென்று தீ பற்றி எரிந்ததில் 18 பேர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் பருச் என்ற நகரில் இருக்கும் நலன்புரி மருத்துவமனையில் அதிகாலை 1 மணிக்கு கொரோனா நோயாளிகளின் வார்டில் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. அங்கு சுமார் 50 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதனால் தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த மருத்துவமனை 4 மாடிகளை கொண்டது. அதிலிருந்து நோயாளிகள் அதிகமானோர் மீட்கப்பட்டு விட்டனர். ஆனால் சுமார் 12 நோயாளிகள் பரிதாபமாக தீயில் கருகி பலியாகினர்.
Gujarat| Fire breaks out at a COVID-19 care centre in Bharuch. Affected patients are being shifted to nearby hospitals. Details awaited. pic.twitter.com/pq88J0eRXY
— ANI (@ANI) April 30, 2021
ஸ்ட்ரெச்சர்கள் மற்றும் படுக்கையில் படுத்தவாறு நோயாளிகள் உயிருடன் எரிந்து கிடந்த வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வருகிறது. அதன்பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்குள்ளாக நெருப்பு அணைக்கப்பட்டுவிட்டது. இதனைத்தொடர்ந்து காலையில் 6:30 மணிக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்ததாக கூறப்பட்டுள்ளது.