பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் பாகிஸ்தானில் 48 மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நேற்று வரை 2 லட்சத்து 28 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 ஆயிரத்து 700 பேர் மரணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மருத்துவ பணியில் ஈடுபட்டவர்களும் அடங்குவர்.
அதிலும் குறிப்பாக மருத்துவர்களே அதிகம். இந்நிலையில் மருத்துவர்கள் செவிலியர்கள் அணியும் பிபிஇ கிட் என்ற மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என தெரிவித்து பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வந்த 48 மருத்துவர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.