Categories
தேசிய செய்திகள்

உயிரைப் பறித்த 20 ரூபாய்…. இப்படி ஒரு கொடுமையா?…. பதற வைக்கும் வீடியோ….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மோதிக்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சலீம். இவர் அங்குள்ள பஜாரில் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது அவரிடம் 20 ரூபாய் குறைவாக இருந்துள்ளது. இதனை பொருட்கள் வாங்கிய கடைக்காரரிடம் சலீம் கூறிய நிலையில் கடைக்காரர் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகளப்பாக மாறியது. அப்போது அங்கிருந்த மற்ற நபர்களும் சலீமை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் கூட்டத்தில் அவமானம் தாங்க முடியாத சலீம் அங்கிருந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories

Tech |