பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான்கான் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வந்தார். கடந்த 3-ம் தேதி பஞ்சாப் மாகாணம் வாஜராபாத் நகரில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் இம்ரான்கான் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டதில் வலது காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயமடைந்துள்ளார். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சைக்கு பின் லாகூரில் உள்ள குடியிருப்பில் ஓய்வில் இருந்த இம்ரான்கான் தற்போது மீண்டும் அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்பதாக கூறியுள்ளார். ஆனால் பேரணியில் பங்கேற்றால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பங்கேற்க வேண்டாம் என பலரும் அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் அதை பொருட்படுத்தாத இம்ரான்கான் நேற்று பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் நடைபெற்றுள்ள பேரணியில் கலந்து கொண்டு தன்னுடைய ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றியுள்ளார்.