இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் பிரச்சினை வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் சில குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் தங்களது உயிரைக் காப்பாற்றக்கூடிய 3 விஷயங்கள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். அந்த வகையில் ஒருவேளை நீங்கள் தெரியாமல் லிப்டில் மாட்டிக் கொண்டீர்கள் என்றால், அதன் கதவை இழுத்து வெளியே செல்ல முயற்சி செய்யக்கூடாது.
ஏனென்றால் அப்போது லிப்ட் திடீரென்று கீழே செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. இதையடுத்து உங்கள் வீட்டு ஜன்னல் (அல்லது) பால்கனி (அல்லது) கதவில் கயிறு போன்று ஒன்று இருந்தால் அந்த வீட்டில் நாய் இருக்கும் என்று திருடர்கள் நினைத்துக்கொள்வார்கள். ஆகவே அந்த வீடு திருடுவதற்கு ஏற்றது என கொள்ளையர்கள் நினைத்து தன் கைவரிசையை காட்டுவார்கள்.
ஆகவே அது போன்ற ஒரு கயிறு இருந்தால் நீங்கள் அதை அகற்றிவிட வேண்டும். அதனைத் தொடர்ந்து நீங்கள் கார் (அல்லது) பைக்கில் வெளியில் செல்லும்போது யாராவது உங்களை பாலோ செய்வது போன்று இருந்தால், உடனே வீட்டிற்கு செல்லக்கூடாது. அவ்வாறு பாலோவ் செய்வதுபோல் இருந்தால் தொடர்ந்து நீங்கள் வண்டியை ஓட்டிக்கொண்டே இருக்க வேண்டும். மேலும் பாலோவ் செய்தார்கள் என்றால், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுவிட வேண்டும்.