போதை பொருட்களை பயன்படுத்துதல், போதைப் பொருள்களைக் கடத்தல், போதைப் பொருள் விற்பனை ஆகியவற்றை ஒழிக்க கடுமையான சட்டங்கள் மூலம் அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. போதை பொருள் கடத்தல் சம்பவங்களும் தினமும் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. புதிய நுட்பத்தைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை கடத்தும் கும்பல் கஞ்சா உள்ளிட்ட பல வகையான போதை பொருட்களையோ சட்டத்திற்கு புறம்பாக கடத்தி விற்பனை செய்து வருகிறது.
இதனால் சிலர் போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்க முடியாத அளவிற்கு அடிமையாகியுள்ளனர். உலகம் முழுவதும் இன்றைய சூழலில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாவது வருத்தமான விஷயம். உலக அளவில் 15 வயது முதல் 64 வயது வரை உள்ளவர்களில் போதை மருந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 கோடியே 90 லட்சமாகவும் உள்ளது. இதில் வாழ்க்கையில் ஒருமுறையாவது போதை மருந்து பயன்படுத்துவோர் 25 கோடியில் 10 லட்சம் பேர் உள்ளனர்.
உலகில் மொத்தம் 439 கோடியே 60 லட்சம் பேர் போதைப் பொருள் பயன்படுத்துகின்றனர் என ஐநா சபை போதைபொருள் குற்றப் பிரிவு சார்பில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் என்ற பெயரில் மது போதை பொருட்களை உட்கொள்ளும் கலாச்சாரம் மிகப் பெரிய அழிவிர்க்கு வழிவகுக்கிறது. உரிய வழிகாட்டுதல் இன்றி இளைஞர்கள் அதிகளவில் கேட்க பழக்கங்களின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த நவீன காலத்தில் ஆண் பெண் பேதமின்றி இருபாலரும் போதை பொருளுக்கு அடிமையாகி வருவது அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகி வருகிறது.
பள்ளி கல்லூரி வீடுகளில் கண்காணிப்பு சீராக இருந்தால் போதைப்பொருள் கொடுமையிலிருந்து இளைஞர்களைக் காப்பாற்ற முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். தொடர் சிகிச்சையின் மூலம் யாரையும் நல்வழிப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இன்றைய சமுதாயம் உணரும் காலம் உருவானால் தான் போதை பொருட்களை முற்றிலும் ஒழித்து போதை பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நிலை ஏற்படும் என்பதே நிதர்சனமான உண்மை.