Categories
உலக செய்திகள்

“உயிரோடு இருக்கும்போதே உங்கள் நாட்டுக்கு ஓடி விடுங்கள்”…. உக்ரைன் அரசு எச்சரிக்கை….!!!!!!

ரஷ்யாவின் தொடர் தாக்குதலுக்கு ஈடாக உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் ரஷ்யாவிற்கு இப்போர் பல்லாயிரக்கணக்கான வீரர்களை களப்பலியாக கொடுத்துள்ளது. இந்நிலையில் மீதமுள்ள ரஷ்ய துருப்புகளை உயிரோடு ஓடிவிடுமாறு உக்ரைன்படை வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக உக்ரைன் படை வீரர் ஒருவர் கூறியதாவது, “ஓடுங்கள், ஓடி விடுங்கள், குழந்தைகளை கொல்லாதீர்கள், வீடுகளை, குடும்பங்களை அழிக்காதீர்கள் என்று கூறினர்.

மேலும் உயிரோடு இருக்கும்போதே உங்கள் நாட்டுக்கு ஓடி விடுங்கள்” என கூறியதாக பிபிசி தெரிவித்துள்ளது. உக்ரைன் போரில் ரஷ்யா 1 லட்சத்து 90 ஆயிரம் துருப்புகளை களமிறக்கி இருக்கிறது. அவர்களில் 15 ஆயிரம் துருப்புகள் வரையில் இப்போரில் இதுவரையிலும் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு கூறுகிறது.

Categories

Tech |