Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உயிரோடு தீ வைத்து எரித்த கணவர்….. மனைவிக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…..!!!

நடத்தை மீது சந்தேகப்பட்டு கணவர் மனைவியை உயிரோடு தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் சன்னதி தெருவில் சிவராமன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜீவலட்சுமி(42) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் மாவு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜீவலட்சுமியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட சிவராமன் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபமடைந்த சிவராமன் மண்ணெண்ணையை எடுத்து மனைவியின் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து ஜீவலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கருகிய நிலையில் கடந்த பெண்ணை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் தப்பி ஓடிய சிவராமனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |