உலகின் ஒருசில நாடுகளில் பாம்பு, பூச்சிகளை சாப்பிடும் பழக்கம் இருப்பது நாம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் தவளையை கூட உயிரோடு தட்டில் வைத்து அப்படியே சாப்பிடுகின்றனர். பெண் ஒருவர் சாப்பிடுவதற்காக ஹோட்டல் செல்கிறார். அங்கு அவருக்கு உயிரோடு ஒரு தவளையை அப்படியே பிடித்து அதன் தோலை உரித்து தட்டில் வைத்து கொடுக்கிறார்கள்.
இந்த வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தட்டில் இருக்கும்போது கூட அந்த தவளை கண்களை மூடி திறக்கிறது. இது பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளது. ஆனால் அவர்களுக்கு ருசியாக உள்ளது போல அந்த பெண் பாவனை செய்கிறார்.