டிவியை தாய் அணைத்ததால் 19 வயது இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞன் நேற்று முன்தினம் தனது ஆன்லைன் வகுப்புகளை முடித்துவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் படுத்துக்கொண்டு டிவி பார்த்ததால் அவரது தாய் சரியாக அமரும்படி கூறிவிட்டு டிவியை அணைத்து விட்டார். இதனையடுத்து கழிவறைக்கு சென்ற இளைஞன் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய் சென்று பார்த்தபோது இளைஞன் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் மற்றும் தங்கை சத்தம் போட அக்கம் பக்கம் இருந்தவர்கள் விரைந்து வந்த காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் இளைஞனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.